About Us

GURU WAVES ஜோதிட நிலையமானது ஆன்மீகத்தின் மூலமான மதுரையை பிறப்பிடமாக கொண்ட பாரம்பரிய ஜோதிடர்களால் வழி நடத்தப்படும் நிறுவனமாகும்.


தற்போது சென்னையை மையமாக கொண்டு இயங்கி வருகிறது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலான ஜோதிட அனுபவம் கொண்ட தந்தையும் அவரது மகனும் இணைந்து நடத்திவரும் திருக்கணித ஜோதிட நிலையமாகும்.


Guru waves நம் முன்னோர்கள் நமக்கு வழங்கி சென்ற ஒப்பற்ற கலையான ஜோதிட கலையின் பழம்பெரும் நூல்களின் துணை கொண்டு வானியல் சாஸ்திரமான எபிமரிஸ் என்னும் தூய திருகணித முறைப்படி வாடிக்கையாளர்களுக்கு ஜாதக பலன்களை சொல்லி வருகிறோம்.


ஒருவரின் கிரக அமைப்புகளின் நிலையை பொறுத்து நடப்பவைகள் நடந்தே தீரும். அதிலிருந்து யாரும் தப்பி விட முடியாது. என்றும், அதற்கு பரிகாரம் என்பதெல்லாம் கிடையாது என்றும் அடித்து கூறும் ஒரே ஜோதிட அமைப்பாகும்.


இறை நம்பிக்கை அற்றவர்கள் மனோதிடத்தோடும், இறை நம்பிக்கை உள்ளவர்கள் இறை வழிபாட்டின் மூலமும் கெட்ட தசா புக்திகளை கடந்து செல்ல வேண்டி இருக்கும் என கூறும் ஒரே நிறுவனம் ஆகும். ஏனெனில் ஜோதிடம் என்பது அறிவியல் அல்லவா!


எங்களின் சிறப்பம்சங்கள், தனி நபர் ஜாதகம் கணிப்பதும், திருமண பொருத்தம் பார்ப்பதும் மற்றும் ராசிகல் தொடர்பான பரிந்துரைகளுமாகும்.


தனி நபர் ஜாதகத்தை துல்லியமான திருக்கணித முறைப்படி நன்கு ஆராய்ந்து சொல்வோம்.


திருமண பொருத்தம் என்பது வெறும் பத்து பொருத்தமாக அல்லாமல் இரு ஜாதகங்களையும் ஒப்பிட்டு துல்லியமான பொருத்தத்தை சொல்லும் ஜாதக அனுகூல பொருத்தமாகும்.


மேலும் ராசி கல் என்பதை ஏதோ ராசிக்கு சொல்லாமல் உங்கள் ஜாதகப்படியும், ஜாதக லக்னத்தின் படியும் ஆய்வு செய்து சொல்வது எங்களின் சிறப்பம்சமாகும்.