லக்னமே நடைமுறையில் முதன்மை பங்கு வகிக்கிறது.
ராசியை கொண்டு கோச்சார ராசி பலன்களை கணக்கிடுகிறோம், இது எல்லாம் ஒரு அளவிற்கு தான் பலன்களை செய்யும். சுய ஜாதகமே பிரதானமாக பலன்களை செய்யக்கூடியது. ஒருவருக்கு ஒரு விஷயம் எப்போது நடக்கும் ? நல்ல காலம் எப்போது ? கெட்ட காலம் எப்போது ? என்பதை எல்லாம் கணிப்பதற்கு லக்னமும், தசா புக்திகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்த லக்னமானது ஜாதகத்தில் வலுத்து விட்டாலே அது யோக ஜாதகம் தான். லக்னம் வலுப்பது என்பது, லக்னம் வர்கோத்தமம் அடைவது, அதாவது ராசி கட்டத்திலும் அம்ச கட்டத்திலும் ஒரே வீட்டில் லக்னம் அமைவது, அல்லது லக்னத்தை சுப கிரகங்கள் பார்ப்பது அல்லது லக்னத்தில் சுப கிரகங்கள் இருப்பது, லக்னாதிபதி ஆட்சி உச்சம் நட்பு போன்ற நிலைகளிலும், பரிவர்த்தனை அடைவது, வர்க்கோத்தமம் அடைவது, நீசமாகி இருந்தால் கூட முறையான நீசபங்கத்தை அடைந்திருப்பது, லக்னாதிபதிக்கு சுப கிரகங்களின் தொடர்புகள் கிடைப்பது போன்ற பல நிலைகளில் லக்னம் ஒரு ஜாதகத்தில் வலுக்கும்.
இப்படி லக்னம் வலுத்தவர்கள், கெட்ட காலங்களாக சொல்லப்படும் அவ யோக தசா புக்தி காலங்களில் கூட அவற்றை எளிதில் திறம்பட சமாளித்து வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடைந்து விடுவார்கள். லக்னாதிபதி வலுத்தவர்களுக்கு எவ்வளவு பெரிய கெட்ட காலங்கள் நடந்து கொண்டிருந்தாலும் கடைசி நேரத்தில் கூட அவர்களை காப்பாற்ற ஏதேனும் ஒரு சூழ்நிலையை கிரகங்கள் உருவாக்கி விடும்.
இதற்கு மாறாக லக்னம் லக்னாதிபதி கெட்டுப் போய் இருப்பவர்களுக்கு, சொந்த ஜாதகத்தையும் ராசியே வழிநடத்தும். என்ன தான் லக்னத்திற்கு இணையான அமைப்பாக ராசி இருந்து, லக்னம் கெட்டு ராசி வழி நடத்தினாலும், அது லக்னம் வலுத்த அளவிற்கு சிறப்பானதல்ல.
இதுபோல், லக்னம் கெட்டு ராசி வழி நடத்தும் ஜாதகங்கள் கெட்ட தசா புக்திகளில் அதிகம் சிரமங்களை சந்திக்கிறார்கள். இவர்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயமும் தாமதமாகியும், பெரும் போராட்டத்திற்கு பிறகும் கிடைக்கிறது. பெரும்பாலும் லக்னாதிபதி கெட்டு, ராசி வழிநடத்தும் ஜாதகங்கள் எல்லாம் வாழ்வின் முற்பகுதியில் அதிக சிரமங்களை சந்தித்து, பிற்பகுதியில் இருந்து ஓரளவு நல்ல வாழ்க்கை வாழ தொடங்குகிறார்கள்.
இதுவே லக்னம் வலுத்தவர்கள் எப்போதும் ஓரளவு நல்ல நிலையிலேயே வாழ்க்கையை வாழ்பவர்களாக இருக்கிறார்கள். இதனால்தான் ஒரு ஜாதகத்தில் லக்னம் வலுவடைய வேண்டும் என சொல்லப்படுகிறது.
மேலும் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க விரும்பினால் CLICK HERE
0 Comments