செவ்வாய் தோஷம் என்றால் என்ன? செவ்வாய் தோஷம் உண்மையா? செவ்வாய் தோஷம் என்ன செய்யும்?

செவ்வாய் தோஷம் என்றால் என்ன?செவ்வாய் தோஷம் உண்மையா? செவ்வாய் தோஷம் என்ன செய்யும்?

செவ்வாய் தோஷம் என்றால் என்ன? செவ்வாய் தோஷம் உண்மையா? செவ்வாய் தோஷம் என்ன செய்யும்?


ராசி லக்னங்களுக்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களிள் செவ்வாய் இருந்தால் அது தோஷம் என்று நம்பப்படுகிறது. ஆம்! நம்ப மட்டுமேபடுகிறது. இதில் எந்தளவு உண்மை உள்ளது என பார்ப்போம்.

                    

செவ்வாய் தோஷம் என்பது பொதுவாக ராசி லக்னங்களுக்கு குறிப்பிட்ட மேற் சொன்ன ஸ்தானங்களில் செவ்வாய் இருப்பது என சொல்லப்பட்டாலும், அதற்கான விதி விலக்குகள் மிக அதிகம்.

 

ஒரு அனுபவ மிக்க ஜோதிடரால் மட்டுமே ஜாதகத்தை பார்த்து உண்மையில் இது தோஷமுள்ள ஜாதகமா என்பதை கண்டறிய முடியும்.

 

உதாரணமாக செவ்வாய் எந்த நிலையில் இருக்கிறார், செவ்வாய்க்கு எந்தெந்த கிரகங்களின் தொடர்புகள் உண்டு, ஒருவர் பிறந்த லக்னம் மற்றும் ராசியை பொருத்தும் செவ்வாய் தோஷம் வேலை செய்யாமல் போக அதிக வாய்ப்புண்டு.

 

மேலும், ஒருவருக்கு எந்த வயதில் செவ்வாய் தசை வரும் என்பது கருத்தில் கொள்ளப்படவேண்டிய முக்கய விஷயமாகும்.

 

செவ்வாய் தசை முடிந்திருந்தாலும், வாழ்வில் வயதான காலத்தில் செவ்வாய் தசை வந்தாலும், செவ்வாய் தோஷம் வேலை செய்யாது.

 

மேலும், ஆணுக்கு 31 வயதுக்கு மேல், பெண்ணுக்கு 27 வயதிற்கு மேல் திருமணம் செய்தாலே செவ்வாய் தோஷம் குறித்து அச்சப்பட அவசியமே இல்லை.

 

இந்த விதிகளை எல்லாம் மொத்தமாக பொருத்தி பார்த்தால் லட்சத்தில் ஒருவருக்கு கூட செவ்வாய் தோஷம் இருக்காது.

 

அனைவரும் பார்த்து பயப்படும் படியானதல்ல செவ்வாய் தோஷம்.

 

செவ்வாய் தோஷம் இருப்பதாக நீங்களாக கர்ப்பனை செய்து நல்ல வாழ்க்கை துணையை இழந்து விடாதீர்கள்.

 

நான்கில் செவ்வாய், பணிரெண்டில் செவ்வாய் எல்லாம் பெரிய பிரச்சனைகளே இல்லை. அது போல் ராசிக்கு இருப்பதும் பெரிய சிக்கல்களை தராது.

 

லக்னத்திற்கு இரண்டு ஏழு மற்றும் எட்டாமிடங்களில் தோஷம் அமைந்தால் மட்டுமே. சற்று கவனமெடுத்து பார்க்க வேண்டும்.

 

அதற்கும் குரு, சுக்கிர, வளர்பிறை சந்திர மற்றும் தனித்த புதனின் தொடர்புகள் கிடைக்கும் போது சுத்தமாக வேலை செய்யாது.

 

என்ன தோஷம் இருந்தாலும் குறிப்பிட்ட கிரகங்களின் தசைகளில் தான் அவை செயல்படும் என்னும் விதிப்படி செவ்வாய் தசை சிறுவயதில் வந்து முடிந்த ஜாதகங்கள், வயதான காலத்தில் கணவனை இழக்கும் நிலையில் செவ்வாய் தசை வருவது அல்லது வாழ்வில் செவ்வாய் தசை வாராமலே போவது போன்ற சூழல்களில் செவ்வாய் தோஷம் இருந்தும் எந்த கெடுதல்களும் நேராது.

 

செவ்வாய் தோஷமிருந்தாலே இரண்டு தாரமா? என்றும் கூட சிலர் கேட்கிறீர்கள்.

 

செவ்வாய் தோஷம் மட்டும் இருந்தால் இரண்டு தாரம் அமைவதில்லை.

 

செவ்வாய் தோஷம் மட்டும் இருப்பவர்கள். சிறிது காலம் கணவன் மனைவி பிறிந்திருப்பது, அல்லது தாமதமாக திருமணம் அமைவது போன்ற இயற்க்கை பரிகாரங்களிலேயே சரியாகி விடும்.

 

ஜாதகத்தில் இரண்டு தாரத்தை குறிக்கும் விதிகள் வேறு. அவற்றை பற்றி பின் வரும் கட்டுரைகளில் பார்ப்போம். அந்த இருதார விதிகளுடன் செவ்வாய் தோஷமும் இணையும் போது தான் இருதார நிகழ்வுகள் நடக்கும். அதற்கு இருதார ஜோதிட விதிகள் தான் காரணமே தவிர, செவ்வாய் தோஷம் காரணமில்லை.

 

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் தோஷமுள்ளவர்களை திருமணம் செய்ய சொல்வது ஏன்?

 

இதற்கு சிலர் அறிவியல் பூர்வமாக ரத்த வகைகளை காரணம் காட்டுவர். நான் அவற்றோடு ஒத்து போவதில்லை.

 

அறிவியல் படி விளக்க வேண்டுமானால் அது அனைத்து நிலைகளிலும் அனைத்து செவ்வாய் தோஷமுள்ள ஜாதகத்திலும் பொருந்த வேண்டும்.

 

நான் பார்த்த வரையில், செவ்வாய் தோஷமுள்ள இரு ஜாதகங்கள் இணையும் போது இயர்க்கையான சில வழிமுறைகளின் படி தோஷ நிவர்த்தி ஏற்படுவதை கண்டுள்ளேன். அது தாமதமாக நடக்கும் திருமணங்களில் நூறு சதவீதம் பொருந்துகிறது.

 

பிறகு செவ்வாய் தோஷம் சமூகத்தில் ஏன் இத்தனை பெரிய தாக்கங்களை உண்டு பண்ணுகிறது?

 

உண்மையில் செவ்வாய் தோஷம் ஜோதிடர்களாலும் பெரிது படுத்தபடவில்லை, ஜோதிடத்திலும் பெரிதாய் சொல்லப் படவில்லை.

 

பெரும்பாலும் தற்சமயம் திருமண தகவல் மையங்களில் பதியும் போதே, அவர்கள் ஜாதகத்தை வாங்கி, இந்த ஜாதகங்கள் செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகங்கள், இவை செவ்வாய் தோஷம் இல்லாத ஜாதகங்கள் என அவர்களாகவே வகை படுத்த தொடங்கி விட்டனர்.

 

அவர்களுக்கு செவ்வாய் தோஷ விதிகள் தெரிகிறது. ஆனால் செவ்வாய் தோஷ விதிவிலக்குகள் சுத்தமாக தெரிவதில்லை.

 

மேலும் தற்சமயம் ஆன்லைனில், ஜோதிடர் துணையின்றி ஜாதகம் கணிக்கும் போது அந்த software ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உண்டா? இல்லையா? என சொல்கிறது.

 

அந்த software க்கும் செவ்வாய் தோஷ விதிகள் அதில் programing செய்து வைக்க பட்டுள்ளது. ஆனால் செவ்வாய் தோஷ விதி விலக்குகள் அதில் programing செய்து வைக்கபடவில்லை. அது சாத்தியமும் இல்லை.

 

செவ்வாய் தோஷத்தையும் அதன் தன்மையையும் அறிய நல்ல ஜோதிடரால் மட்டுமே முடியும். அதற்கு அனுபவ விதிகளும், பாரம்பரிய ஜோதிட விதிகளும் தேவைப்படும். முக்கியமாக விதிவிலக்குகளும் அவசியம்.

 

இது எதுவும் தெரியாமல் செவ்வாய் தோஷம் இருப்பதாக நினைத்து அதை நம்பி எந்த பெண்ணின் வாழ்கையையோ ஆணின் வாழ்க்கையையோ வீனாக்கி விடாதீர்கள். அது மிக பெரிய தவறு.

 

தற்போதைய காலகட்டத்தில் கல்வி, வேலை மற்றும் வாழ்க்கையில் செட்டிலாவதற்கு தேவையான அனைத்தையும் செய்து முடித்துவிட்டு திருமணம் செய்யும் சமூகமாக நாம் உருவாகி விட்டோம். ஆகவே பெரும்பாலான திருமணங்கள் தாமதமாகவே நடக்கிறது. ஆகவே செவ்வாய் தோஷம் குறித்து இனி அச்சப்பட எதுவுமே இல்லை.

 

மொத்தத்தில் செவ்வாய் தோஷம் என்பதை விதிவிலக்குகளுடன் பார்த்தால் அது பயப்படும் படியான தோஷமே இல்லை. சாதாரண தாமத திருமண அமைப்பு என்பது தெளிவாய் புரியும்.


எங்களிடம் ஜாதகம் பார்க்க:- CLICK HERE


எங்களிடம் திருமண பொருத்தம் பார்க்க:- CLICK HERE 


நன்றி.

Post a Comment

0 Comments