அரசு உயர் பதவி ஜாதகம் | அரசு வேலை தசா புக்தி

அரசு உயர் பதவியில் இருப்பவர் ஜாதகம் எப்படி இருக்கும்.


அரசு உயர் பதவி ஜாதகம் | அரசு வேலை தசா புக்தி

எங்களிடம் ஜாதகம் பார்க்க:- CLICK HERE

 

ஏற்கனவே அரசு வேலை கிடைக்க எப்படி ஜாதகம் இருக்க வேண்டும் என்பதையும், அரசு வேலையில் எந்தத் துறை அமையும் என்பதையும் முன்னர் பார்த்திருந்தோம்.

 

தற்போது அரசு வேலையில் உயர் பதவிகளை அடைய எது போன்ற கிரக நிலைகள் இருக்க வேண்டும் என்பதை இந்த கட்டுரையில் தெளிவாக பார்ப்போம்.

 

தொழில் மற்றும் ஜீவனத்தை குறிக்கும் பாவகம் பத்தாம் பாவகமாகும், ஒருவருக்கு ராசி மற்றும் லக்னத்திற்கு பத்தாமிடமும் பத்தாம் அதிபதியும் அதிகம் வலுத்திருந்தால் ஒருவருக்கு உயர்பதவி நிச்சயம். 


இதற்கு முந்தைய கட்டுரைகளில் நான் சொன்ன விதிகள் பொருந்தும் பட்சத்தில் அது அரசு உயர் பதவியாக அமையும்.

 

மேலும் அரசு வேலைக்கான அமைப்புகள் இருந்து, நமது பழமையான ஜோதிட நூல்கள் வலியுறுத்தி சொல்லியுள்ள ராஜ யோகங்கள் இருந்தாலும் ஒருவர் அரசு உயர் பதவில் அமர்வார்.

 

நாம் இதற்கு முன் பார்த்த ஒன்பது மற்றும் பத்தாம் அதிபதிகளின் வலுவாலும், தொடர்பாலும் ஏற்படும் தர்ம கர்மாதிபதி யோகம், நாம் இனி வரும் நாட்களில் பார்க்க இருக்கும், சிவராஜ யோகம், பவுர்ணமி யோகம், பஞ்சமகா புருஷ யோகங்கள் ஆகியவையும் ஒருவருக்கு உயர் பதவிகளை தரும்.

 

இது போக சூரியன் ஜாதகத்தில் வலுத்து இருந்தாலும் உயர் பதவிகள் நிச்சயம்!

 

பொதுவாகவே சித்திரை மாதத்தில் சூரியன் உச்சமாகவும், ஆவணி மாதம் பிறந்தவர்களுக்கு சூரியன் ஆட்சியாகவும், நண்பகல் உச்சி பொழுதில் பிறந்தவர்களுக்கு சூரியன் திக்பலமாகவும் இருப்பார்.

 

இந்த நேரம் மற்றும் மாதங்களில் பிறந்தவர்களுக்கு இயல்பிலேயே அதிகார தோரணை வந்து விடும். மனம் அதிகாரத்தையே அதிகம் நாடும்.

 

மேலும் செவ்வாய் அதிகாரத்திற்கு துணை புரியும் கிரமாக கருதப்படுகிறது. ஆகவே செவ்வாயின் வலுவும் ஜாதகத்தில் கவனிக்கப்பட வேண்டியது அவசியம்.

 

மேலும் ஜாதகத்தில் எந்த கிரகம் வலுவாக இருந்தாலும், எத்தனை யோகங்கள் இருந்தாலும் அதை அனுபவிக்க இரண்டு முக்கிய விசயங்கள் அவசியம்.

 

ஒன்று லக்னாதிபதியின் வலு! எத்தனை யோகங்கள் இருந்தும் லக்னாதிபதி கெட்டிருந்தால் அந்த யோகத்தை அனுபவிக்க தகுதியான நபராக ஒருவர் இருக்க முடியாது.

 

மற்றொன்று தசா புக்தி, அரசு வேலை மற்றும் உயர்பதவியை பெற தசா புக்தி மிகவும் அவசியம்.

 

தசா புக்தி ஒத்துழைக்கவில்லை என்றால் அரசுவேலை கானல் நீராகி போகும். 

 

அரசு வேலை தசா புக்தி என்று ஒன்று தனியாக இல்லை. பொதுவாக சூரிய, சந்திர, செவ்வாய் மற்றும் குருவின் தசா புக்திகள் அரசு வேலைக்கான தசா புக்திகளாக சொல்லப்பட்டாலும், இவர்கள் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை பொருத்து தான் அரசு வேலை கிடைப்பதோ உயர் பதவி கிடைப்பதோ அமையும்.

 

மேலும் இவர்கள் அல்லாத சுக்கிரன், புதன், சனி, ராகு கேதுக்களும் உங்களுக்கு யோகர்களாக இருந்து அவர்களின் தசையும் நடந்து, அரசு வேலைக்கான அமைப்புகள் உங்கள் ஜாதகத்தில் இருந்தாலும் நிச்சயம் அரசு வேலை மற்றும் உயர் பதவிகள் கிடைக்கும்.

 

உங்கள் லக்னத்திற்கு கெடுதல் செய்யும் கிரகங்களின் தசா புக்திகள் மற்றும், ஏழரை அஷ்டம சனி நடப்பில் இருந்தாலும் அரசு வேலை கிடைப்பதிலும், உயர் பதவிகள் கிடைப்பதிலும் நிச்சயம் தடைகள் இருக்கும்.

 

இவற்றைப் பற்றியும் பின் வரும் கட்டுரைகளில் விரிவாக பார்ப்போம்.

 

விரைவில் உதாரண  ஜாதகத்துடன் நமது YOUTUBE சேனலில் வீடியோ வெளியிடுவோம்.

  

எங்களிடம் ஜாதகம் பார்க்க:- CLICK HERE

Post a Comment

0 Comments