தர்மகர்மாதிபதி யோகம்

 தர்மகர்மாதிபதி யோகம் என்ன செய்யும் ? |

 தர்மகர்மாதிபதி யோகம் என்றால் என்ன ?


தர்மகர்மாதிபதி யோகம்



இந்திய ஜோதிட முறையில் யோகங்கள் குறித்து அதிகம் பேசப்பட்டாலும், ராஜ யோகம் என சில யோகங்கள் மட்டுமே சொல்லபட்டுள்ளன.

 

அதிலும் சில ராஜ யோகங்களை பற்றி மட்டுமே உயர்வாகவும் சொல்லப்பட்டுள்ளது. அதில் ஒன்று தான் தர்ம கர்மாதிபதி யோகமாகும்.

 

மேலும் பழமையான முக்கிய ஜோதிட நூல்கள் அனைத்தும் தர்ம கர்மாதிபதி யோகம் குறித்து தெளிவாக விளக்கியுள்ளன.

 

ராஜ யோகம் என்பது ஒருவர் அரசனாவாரா! என்பதை கணிக்க சொல்லப் பட்டுள்ள மிக முக்கிய ஜோதிட விதியாகும்.

 

இங்கே அரசன் என குறிப்பிடுவது, ஒரு குறிப்பிடத்தக்க கூட்டத்திற்கு தலைவனாகவோ அல்லது, ஒரு குறிப்பிட்ட துறையில் பலரும் அறியும் முக்கிய புள்ளியாகவோ வருவாரா? என பொருள் கொள்ள வேண்டும்.

 

தர்ம கர்மாதிபதி யோகம் என்பது, லக்னத்திற்கு பெரும் கோணம் எனப்படும், ஒன்பதாமதிபதியும், லக்னத்திற்கு பெரும் கேந்திரம் என சொல்லப்படும் பத்தாம் அதிபதியும் தங்களுக்குள் தொடர்பு கொள்வதோ, வலுத்திருப்பதோ தர்ம கர்மாதிபதி யோகம் எனப்படும்.

 

இருவரும் வலுத்து சுப கிரக பார்வையுடன் தொடர்பு கொண்டிருப்பது முதல் தர தர்மகர்மாதிபதி யோகமாகும்.

 

மேலும், ஒன்பது, பத்தாம் அதிபதிகள் ஒன்றாக இணைந்தோ, பரிவர்த்தனை பெற்றோ, ஆட்சியாகவோ, உச்சமாகவோ இருப்பதும் தர்ம கர்மாதிபதி யோகம் என சொல்லப்படுகிறது.

 

பொதுவாக இந்த ஒன்பது பத்தாம் அதிபதிகளின் தசை ஒருவருக்கு எந்த நிலையிலும் நல்லது செய்யும் தசைகளாகவே வரும்.


எங்களிடம் ஜாதகம் பார்க்க:- CLICK HERE

 

இனி ஒவ்வொரு லக்னத்திற்கும் தர்மகர்மாதிபதிகள் யார் என பார்ப்போம்.

 

மேச லக்னத்திற்கு குருவும் சனியும் தர்ம கர்மாதிபதிகளானாலும், இவர்கள் இருவரும் சேர்ந்திருப்பது குருவை பலவீனபடுத்தும் அமைப்பாகும், இருப்பினும் அங்கே சனி நல்ல பலன்களை தருவார். இருப்பினும் குரு பாதிப்படைவதால் மேச லக்னத்திற்கு தர்மகர்மாதிபதி யோகம் சற்று சிக்கலான யோகம் தான்.

 

ரிஷப லக்னத்திற்கு சனியே ஒன்பது பத்தாம் அதிபதியாக வருவதால் அவரே ஒற்றை ராஜயோகாதிபதியாக செயல்படுவார்.

 

மிதுன லக்னத்திற்கும் மேசத்தை போலவே தர்ம கர்மாதிபதி யோகம் அமையும். இருப்பினும் மிதுனத்திற்கு சனி பலப்படுவது நல்லது தான்.

 

கடக லக்னத்திற்கு குருவும் செவ்வாயும் தர்ம கர்மாதிபதிகளாவார்கள். இவர்கள் இருவரும் இவர்களுக்குள் நட்பாகவும் லக்ன நண்பர்களாவும் வருவதால் இவர்கள் இருவரும் சேர்ந்திருந்து தசை நடத்துவது மிகவும் சிறப்பானதாகும்.

 

சிம்ம லக்னத்திற்கு செவ்வாயும், சுக்கிரனும் தர்ம கர்மாதிபதிகளாவார்கள். இருப்பினும் சுக்கிரனை விட செவ்வாயே சிம்ம லக்னத்திற்கு நற்பலன்களை அதிகம் தரும் கிரகமாகும்.

 

கன்னி லக்னத்திற்கு சுக்கிரனும், புதனும் தர்ம கர்மாதிபதிகளாவார்கள் இவர்கள் இருவரும் வருடத்தின் பெரும் பகுதி நாட்கள் சேர்ந்தே இருப்பார்கள் என்பதால் அடிக்கடி இந்த யோகம் ஏற்படும், இருப்பினும் இவர்கள் சூரியனுடன் சேர்ந்தால் சுக்கிரன் அஸ்தங்க தோசத்தை அடைவதற்கும் வாய்ப்புண்டு. சுக்கிரனும் புதனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள ஜாதகத்தில் வாய்ப்பில்லை.

 

துலாம் லக்னத்திற்கு புதனும் சந்திரனும் தர்ம கர்மாதிபதிகளாவார்கள். இவர்களில் புதனே உங்களுக்கு சிறந்த யோகத்தை செய்வார். சந்திரன் பகை கிரகம் என்பதால் உங்களுக்கு முழுமையான யோகத்தை செய்ய மாட்டார்.

 

விருச்சிக லக்னத்திற்கு தர்ம கர்மாதிபதிகளாக சூரியனும் சந்திரனும் வருவார்கள். இவர்கள் இருவரும் இணையும் அமைப்பு ஜாதகத்தில் அமாவாசையாகவும், பார்த்து கொள்ளும் அமைப்பு பவுர்ணமி யோகமாகவும் சொல்லபட்டுள்ளது. ஆகவே இவர்களின் இந்த தர்ம கர்மாதிபதி அமைப்பு விருச்சிகத்திற்கு மிக சிறந்த நற்பலன்களை செய்யும்.

 

தனுசு லக்னத்திற்கு சூரியனும் புதனும் தர்ம கர்மாதிபதிகளாவார்கள், இதில் புதனை விட சூரியனே அதிகம் நற்பலன்களை தருவார். இவர்கள் இருவரும் அடிக்கடி இணைவதாலும் புதனுக்கு அஸ்தங்க தோசம் இல்லை என்பதாலும், தனுசு லக்னத்திற்கு அடிக்கடி  தர்ம கர்மாதிபதி யோகம் அமையும்.

 

மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு புதனும் சுக்கிரனும் தர்ம கர்மாதிபதிகளாவார்கள். இவர்களின் இணைவு மகர லக்னத்திற்கு சிறப்பு என்றாலும், கன்னி லக்னத்திற்கு சொன்ன குறைகளும் பொருந்தும்.

 

கும்ப லக்னத்திற்கு சுக்கிரனும் செவ்வாயும் தர்ம கர்மாதிபதிகளாவார்கள். இருப்பினும் சுக்கிரனே உங்களுக்கு அதிகம் நல்ல பலன்களை தருவார்.

 

மீன லக்னத்திற்கு லக்னாதிபதி குருவும் செவ்வாயும் தர்மகர்மாதிபதிகள் என்பதால் இவர்களின் இணைவு மிக பெரும் யோகமாகும். மேலும் குருவுக்கும் செவ்வாய்க்கும் நல்ல நட்பு என்பதால் இது மிக சிறந்த யோகமாக செயல்படும்.

 

இந்த தர்ம கர்மாதிபதி யோகம் பெரும் பாலான உயர் பதவிகளை அடைந்தவர்களின் ஜாதகங்களிலும் நம்மால் பார்க்க முடியும்.

 

விரைவில் உதாரண ஜாதகத்துடன் நமது YOUTUBE சேனலில் வீடியோ வெளியிடுவோம்.

 

சில ஜாதகங்களில் தர்ம கர்மாதிபதி யோகம் இருப்பினும் அதை பலவீன படுத்தும் அமைப்பும் உடன் இருக்கும் அதையும் கருத்தில் கொண்டே யோகங்களை கணக்கிட வேண்டும்.

 

எங்களிடம் ஜாதகம் பார்க்க:- CLICK HERE


Post a Comment

0 Comments