திருமண பொருத்தம்.


கட்டண திருமண பொருத்தம் பார்க்க CLICK HERE


திருமண பொருத்தம்.

பொதுவாக மகளுக்கோ, மகனுக்கோ திருமணம் குறித்துமுடிவெடுத்தவுடன், அதற்கு தகுதியான வரனை தேர்ந்தெடுக்கும் பொழுது அந்த வரன் நம் மகளுக்கோ,மகனுக்கோ பொருத்தமாக இருக்குமா?

 

இவர்கள் இருவரையும், இணைத்து வாழ வைக்கும் பொழுது அவர்களின் குணம், ஒற்றுமை, வசியம், காதல், காமம், வாழ்க்கை, தலைமுறை, ஆயுள் என பல விடயங்களை கவனத்தில் கொண்டு இருவருக்குமான பொருத்தத்தை ஜோதிடரை அணுகி கேட்டு தெரிந்து, அதன் பின் மணம் பேசி முடிக்கப்படுவது இயல்பாக இருந்து வருகிறது.

 

பெரும்பாலும் பத்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது வாடிக்கையாக உள்ளது. பத்து பொருத்தத்தில் முக்கியமான ஆறு முதல் ஏழு பொருத்தம் வரை இருந்தால் கூட திருமணம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. சில நேரங்களில் ஒன்பது அல்லது பத்து பொருத்தம் கூட பொருந்தி போவதை பார்க்க முடிகிறது.

 

இவ்வாறு பத்து பொருத்தம் பார்த்து முடிவெடுக்கப்படும் திருமணங்கள் வாழ்வில் முழுமையான வெற்றி கண்டதா? என்றால், கேள்வி குறியே ? பத்து பொருத்தம் பார்த்து மணம் முடித்தவர்கள் கூட விவாகரத்து வரை வந்து நிற்பதையும், சிலர் முரண்பாட்டோடு கூடிய வாழ்க்கையையும் வாழ்வதை காண முடிகிறது.

 

எந்த பொருத்தமும் பார்க்காமல், மணம் முடிப்பவர்கள் கூட, அன்யோனியமாகவும், இணை பிரியாமலும் வாழ்வதை காண முடிகிறது. இதற்கெல்லாம் எது காரணமாக அமைகிறது ? என பார்க்க வேண்டும்.

 

அது இருவரின் ஜாதக பொருத்தமே என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.  இது மிகவும் நுட்பமாக கண்டறிய வேண்டிய விடயமாகும். பொதுவாக ஆண் பெண் இணைவை அவரவர்களின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து இணைக்க வேண்டும். ஒரே தசா புக்தி நடப்பில் இல்லாமலும் எதிரணி லக்னத்தையோ கொண்ட ஜாதகங்களையோ இணைக்கக்கூடாது.

 

குறிப்பாக காதல் திருமணத்திற்கு பத்து பொருத்தம் மட்டுமன்றி, ஜாதக பொருத்தம் கூட பார்க்கக் கூடாது. ஏற்பாட்டு திருமணங்களில் மட்டும் திருமண பொருத்தத்தை ஜாதகத்தை கொண்டு தீர்மாணித்து இணைப்பது மட்டுமே சரியானதாகும்.


கட்டண திருமண பொருத்தம் பார்க்க CLICK HERE 

(கட்டணம் ₹1000 மணமகன் மற்றும் மணமகள் இருவரின் ஜாதகத்திற்கும் சேர்த்து)

Post a Comment

0 Comments