Rasi kal | Gemstone in tamil

ராசி கல்லா ? லக்ன கல்லா?

 

ராசி கல் தொடர்பாக விரிவாக தெரிந்து கொள்ள கீழே உள்ள கட்டுரையை முழுவதும் படிக்கவும்.


Rasi kal | Gemstone in tamil





பொதுவாக ராசி கல் ( rasi kal ) அணியும் பழக்கம் நம்மிடையே இருந்து வருகிறது. இது நன்மையா? தீமையா? என்றும், ராசி கல் ( rasikal ) அணிந்தும் பலன் இல்லை என்கின்றனர்.

பிறப்பு ராசிக்கு கல் அணிவது தவறு. ஒருவரின் பிறப்பு லக்னம் எதுவோ, அதுவே அவரின் ஆத்ம சக்திக்கான கல் ஆகும். ஆக லக்ன கல்லே சிறந்தது.

 

ஒவ்வொருவரும் எந்த லக்னத்தில் பிறந்திருக்கின்றனரோ அந்த லக்னாதிபதியின் யோக ரத்தினம் எதுவோ அந்த ரத்தின ( Navarathinam ) கல்லை அணிவதே அவரின் ஆத்ம பலத்தை கூட்டுகிறது.

 

இந்த லக்ன கல்லானது ஒருவர் வாழ் நாள் முழுவதும் அணிந்து கொள்வது ஒன்றே சிறப்பாகும். அத்துடன் நடப்பு தசா புக்தியானது, லக்னாதிபதிக்கு, நட்பு கிரகத்தின் தசாவாக இருக்கும் பட்சத்தில், அந்த தசா நாதனின் ரத்தின கல் பதித்த மோதிரத்தையோ, ஆபரணத்தையோ கூடுதல்களாக அணிந்து கொள்வது மெலும் சிறப்பு தரும்.

 

ஒருவர் பொதுவாக லக்னாதிபதியின் கல் பதித்த ஆபரணம் தவிர, ஒன்றுக்கு மேற்பட்ட ஆபரணங்கள் அணிவதாக இருந்தால், எப்பொழுதும் அவர்களின் திரிகோணாதிபதிகளின் ரத்தின கல் பதித்த மோதிரத்தை அணிந்து கொள்வது சிறப்பு தரும்.

 

அத்துடன் நடப்பு தசா நாதன் சம்பந்த பட்ட லக்னத்திற்கு நட்பாகவோ, யோகராகவோ இருப்பாராயின் அவரின் ரத்தின கல்லையும் சேர்த்து அணிந்து கொள்வது, மேலும் கூடுதல் சிறப்பு தரும்.

 

ஆனால் தசா நாதன் லக்னாதிபதிக்கு பகைவரானால், அவரின் ரத்தினக்கல்லை அணியக் கூடாது. நாம் ஏற்கனவே அணிந்துள்ள

ராசி கல் உண்மையா?


ஏன் பிறப்பு ராசிக்கு கல் அணிய கூடாது ?

 

ராசி கல் தெரிவு செய்வதை ராசியை பொதுமை படுத்தி கல்லை தேர்ந்தெடுப்பது, சரியானதல்ல ராசி நாதன் அந்த ராசிக்கு கெடுதல்களை செய்ய மாட்டார் என்றாலும், அவர் இருக்கும் இடம், பாவகம், காரகம், பார்க்கும் கிரகங்களின் தன்மையை பொறுத்து, அந்த ஜாதகருக்கு, நன்மைகள் செய்ய இயலாமல் போய் விடுகிறது.

 

உதாரணத்திற்கு ஒருவர் மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ரிஷப லக்னத்தில் பிறந்திருப்பாரானால் அப்பொழுது அவர் ராசியாதிபதி குருவின் கல்லை போட்டு கொள்வாரே ஆயின் அது அவருக்கு நிச்சயம் கெடு பலன்களை தான் தரும். காரணம் ராசியாதிபதி குரு லக்னாதிபதிக்கு பகைவராவார்.

 

ரிஷப லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு ராசி நாதன் குரு நிச்சயம் நன்மைகளை செய்ய மாட்டார். எனவே குரு தசா அவரின் வாழ்வில் வராமல் இருப்பதே உத்தமம். என்றிருக்கும் போது, குருவின் கல்லை ராசி கல் என அணிந்து கொண்டு திரிவது தீமையானது தானே!

 

எனவே தான் ராசிக்கு கல் அணிவதை விட்டு விட்டு, லக்னத்தை பொதுமை படுத்தி லக்னாதிபதியின் கல்லை தேர்ந்தெடுத்து நிரந்தரமாக அணிந்து கொள்ள வேண்டும். லக்னாதிபதி வலுவுள்ளவராக அமைவாராயின் அவர் எப்படியானாலும், பிரச்சனைகளை எதிர் கொண்டு, வாழ்ந்து கொண்டு தான் இருப்பார். அவரின் பலத்தை மேலும் கூட்டவே லக்னாதிபதியின் கல்லை தெரிவு செய்ய வேண்டும்.

 

அதே வேலையில் ஒருவருக்கு ராசியாதிபதியும் லக்னாதிபதியும் ஒருவராகவே இருந்து அந்த அதிபதியின் தசா வாழ்வில் வராமலே போனாலும், அவர் அந்த லக்னாதிபதியின் கல்லை தான் அணிந்தாக வேண்டும். அதுவே அவரை லக்னத்தின் அவ யோக தாசக்கலில் இருந்து காக்கும்.

 

லக்ன கல் ஒரு பரிகாரமே

 

ராசிக்கு கல் அணிவது பயனற்றது, லக்னத்திற்கு கல் அனிவது பயனுள்ளது என்றாலும், அது ஒரு பரிகாரமே அன்றி முழு தீர்வாகாது.

 

ஒருவரின் ஜாதகத்தை பொருத்தே அவரின் வாழ்வு தீர்மானிக்கப்படுகிறது. கெட்ட தசா புக்திகள் நடப்பில் இருக்கும் பொழுது ஆலயங்களுக்கு சென்று இறைவனை இறைஞ்சி வேண்டி பாதிப்பின் உக்கிரத்தை குறைத்து கொள்ள முயற்சிப்பதை போன்று கல் அணிவது, பாதிப்பில் இருந்து நம்மை தற்காத்து கொள்ளவும், பாதிப்பின் வீரியத்தை குறைத்து கொள்ளவும், ஒரு தீர்வாக அமைகிறது.

 

நீங்கள் மேஷ லக்னத்தில் பிறந்திருப்பீர்களே ஆயின் மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய் ஆகிறார், எனவே செவ்வாயின் ரத்தினமான பவளக் கல் அணிவது சிறப்பு தரும், இது தவிர கூடுதல் சிறப்பை தர அவரின் திரிகோணாதிபதிகளான சூரியன் மற்றும் குருவின் ரத்தின கற்களை கொண்ட மோதிரங்களையோ ஆபரணங்களையோ கூடுதலாக அணிந்து கொள்ளலாம்.


பவளக் கல் கூடுதல் விலையாக இருப்பதால், அதை வாங்க வசதி இல்லாதவர்கள், சிவப்பு கல் எல்லோரும் வாங்கும் விலையில் இருப்பதால் அதை வாங்கி பயன்படுத்தலாம்.

 

அணியும் உடைகளில் பரிகாரம் உண்டா!

நாம் பயன் படுத்தும், ரத்தின கல் போன்று அணியும் உடையிலும், ஒரு பரிகார வலிமை உண்டு, ஒருவர் ரிஷப லக்னத்தில் பிறந்திருப்பாரானால் மினு மினுக்கும் வெள்ளை கலரில் அதாவது வெண் பட்டு கலரில் சட்டை அணிவது, அவரின் ஆத்ம பலத்தை கூட்டுகிறது.


பல கலரில் ஆடைகள் இருப்பினும், அதை எல்லோரும் அணிந்து அழகு பார்த்தாலும், ஒரு காரிய வெற்றிக்கு செல்லும் போது, அவரின் லக்னாதிபதியின் கலரில் ஆடை அணிந்து செல்வது, அவரின் வெற்றிக்கு பரிகாரமாக அமைந்து விடுகிறது.

 

வீட்டிற்கு வண்ணம் பூசுவதில் பரிகாரம் உண்டா?

 

சிலர் வீட்டுக்கு வண்ணம் பூச சில கலரை தேர்ந்தெடுப்பர், அவருக்கு கெட்ட தசாவோ ஏழரை சனியோ நடைபெறுமாயின் அவரின் கவனத்தை திசை திருப்ப, அவர் லக்னாதிபதியின் வண்ணத்திற்கு, எதிரான கலரை தேர்ந்தெடுக்க வைத்து, சிக்கலில் மாட்டி விடுவார். 


வீட்டின் உரிமையாளர் சிம்ம லக்னத்தில் பிறந்திருப்பார், அவர் தன் வீட்டிற்கு சிவப்பு அடர் சிகப்பு, வெளிர் சிகப்பு, அடர் மஞ்சள். இளம் மஞ்சள் கலர்களை தேர்ந்தெடுக்காது, அடர் நீல கலரை தேர்ந்தெடுத்து வீட்டின் வண்ணத்தை மாற்றுவாரானால், கஷ்டம் குடி கொண்டு, அந்த வீட்டையே இழக்க நேரிடலாம். 


மாறாக, லக்னாதிபதியின் கலரிலோ, திரிகோணாதிபதிகளின் கலரிலோ வண்ணம் தீட்டி இருப்பாரானால், எவ்வளவு சிரமம் ஏற்பட்டிருப்பினும், வீட்டிற்குள் அமைதி நிழவும். மன ஆறுதலை பெற முடியும். கஷ்டத்தை சமாளிக்கும் ஆத்ம பலம் கிடைக்கும். வீடும் நிலைக்கும். ஆகவே வீட்டிற்கு வண்ணம் அடிக்கும் விஷயத்தில் வீட்டின் உரிமையாளரின் ஜாதகத்தில் யோகமான கிரகத்தின் நிறம் எதுவோ அந்த நிறங்களை தேர்ந்தெடுத்து வண்ணமிடுவது யோகத்தை தரும்.


எந்த கிரகத்திற்கு எந்த கல் ?


  1. செவ்வாய் – பவளம் – CORAL
  2. சுக்கிரன் – வைரம் – DIMOND
  3. புதன் – மரகதம் – Emerald
  4. சந்திரன் – முத்து – Pearl
  5. சூரியன் – மாணிக்கம் – Ruby
  6. வியாழன் – புஷ்பராகம் - Yellow sapphire
  7. சனி – நீலக்கல் – Blue sapphire
  8. ராகு – கோமேதகம் – Topaz
  9. கேது – வைடூரியம் – Cat eye 

    மேஷ லக்னம் 

    குணமும், அதிர்ஷ்ட நிறமும், அதிர்ஷ்ட ரத்தினக்கல்லும்.

     

    மேஷ லக்னத்தின் அதிபதி செவ்வாய் ஆவார். எனவே மேஷ லக்னத்திற்கான நிறம் சிகப்பு ஆகும். மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு, சூரியனும் குருவும் திரிகோணாதிபதிகளாவார்கள். சிம்மமும் தனுசும் திரிகோண ராசி ஆகின்றன. 


    இந்த லக்னத்தில் பிறந்தவர்கள், பார்வையிலேயே மதிக்கத்தக்கவர்களாகவும், உறுதியான சிந்தனை மனப்போக்கு கொண்டவர்களாகவும், இருப்பார்கள். எப்பேர்பட்டவர்களிடமும், குறை கண்டு விமர்சிக்கும் குணம் கொண்டவர்களாகவும். எவரையும் தனக்கு பணிந்து வேலை செய்யும் படி, செய்து விடும் சாமர்த்தியசாலிகள் ஆவார்கள். அனைத்து ஆன்மீக தத்துவங்களின் மீதும், அதிகம் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். அற நூல்களையும், சாஸ்திர நூல்களையும் கற்றரிந்து வைத்திருக்கும், பண்புடையவர்கள். பெறும் கோபம் ஏற்படின் எவரையும் பலி தீர்த்து விடும் பண்பு கொண்டவர்கள். எதிரில் படும் புழு பூச்சிகள் விஷ ஜந்துக்கள் இவரிடமிருந்து தப்பிக்க இயலாது.

     

    சூரியனும் வியாழனும் யோகம் தருபவர்கள். இவர்களுக்கு சனி பாதகத்தை செய்பவர். சுக்கிரன் மாரகத்தையோ, மாரகத்திற்கு இணையான கண்டத்தையோ கொடுப்பார்.

     

    இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் நிறத்தில் சிவப்பு நிறத்திற்கு முக்கியம் தருவது நன்மை பயக்கும். ஆடைகளில் சிவப்பு, மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தை பயன்படுத்துவது மேன்மையை தரும். அதிர்ஷ்ட லக்ன கல்லாக பவளக்கல் பதித்த ஆபரணங்களை பயன் படுத்துவதும், கூடுதளாக திரிகோணாதிபதிகளின் புஷ்பராகம் மற்றும், மணிக்க கல்லை பயன் படுத்துவது மிக சிறப்பு ஆகும். 


    இது தவிர ராகு கேதுக்கள் ஜாதகத்தில் யோகராக வருவாராயின் அவரின் நிறமான கருப்பு அல்லது செங்கருப்பு நிற ஆடையும், கோமேதக கல்லையோ அல்லது வைடூரியத்தையோ சேர்த்து அணிந்து கொள்வது யோகம் தரும்.

     

    குறிப்பு:- ஒன்பதிற்குரிய குருவே பணிரெண்டிற்குரியவராகவும் வருவதால் அவரின் கல்லை பயன்படுத்துவதை ஜாதகத்தை பார்த்து தீர்மானிக்க வேண்டும்.

     

    ரிஷப லக்னம் 

    குணமும், அதிர்ஷ்ட நிறமும், அதிர்ஷ்ட ரத்தினக்கல்லும்.

     

     ரிஷப லக்னத்தின் அதிபதி சுக்கிரனாவார் எனவே ரிஷப லக்னத்திற்காண நிறம் மிளிரும் வெண்மை நிறமாகும். ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சனியே யோகராவார். சந்திரனும், வியாழனும் மாரகாதிபதிகளாவார்கள். யோகரான சனியே பாதகாதிபதியுமாவார்.

     

    இவர்கள் உண்மை பேசுபவர்களாகவும், சிவ பக்தி கொண்டவர்களாகவும் இருப்பார்கள். தடித்த தேகம் கொண்டவர்களாகவும், பிறருக்கு கீழ் படிந்து பணி செய்பவர்களாகவும் இருப்பார்கள். கணித சாஸ்திரத்தில் வல்லவர்களாகவும், உயர் ரக ஆடை அணிவதில் விருப்பம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். சிறு பிள்ளைகள் போல் பேசுபவர்களாகவும் புத்திசாலிகளாகவும், பிறர் உரிமைகளை சூழ்ச்சி செய்து அபகரிப்பவர்களாகவும் இருப்பார்கள்.

     

    இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் மின்னும் பளிச்சிட்ட வெள்ளை நிறத்தை கொண்ட ஆடைகளை வழக்கமாக பயன் படுத்துவது நன்மை தரும். மேலும், பச்சை மற்றும் நீல கலரிலும் ஆடைகள் அணியலாம். ஆபாரண வகையில் அதிர்ஷ்ட ரத்தின கல்லாக வைரக்கல் பதித்த ஆபரணங்களை பயன் படுத்துவது, முற்றிலும் மேன்மையானதாகும். கூடுதலாக ரிஷப லக்னத்தின் திரிகோணாதிபதிகளின், அதிர்ஷ்ட கல்லான மரகதக்கல் மற்றும் நீலக்கல் பதித்த ஆபரணங்களையும் பயன்படுத்துவது கூடுதல் சிறப்பு தரும்.

     

    இது தவிர ராகுவோ கேதுவோ லக்னத்திற்கு யோகராக ஜாதகத்தில் வருவாரேயானால் அவர்களின் நிறமான கருப்பு அல்லது செங்கருப்பு நிற ஆடையையும், ஆபரணங்களில் ராகு சுபராய் இருந்தால் கோமேதகத்தையும் கேது சுபராய் இருந்தால் வைடூரியத்தையும், அணிகலனில் சேர்த்து பயன் படுத்துவது மிகுந்த யோகத்தை ஏற்படுத்தும்.

     

    குறிப்பு:- உங்களுக்கு யோகரான சனியே பாதகாதிபதியாகவும் வருவதால், ஜாதகத்தில் சனியின் நிலையை பார்த்தே அதிர்ஷ்ட கல்லை தேர்வு செய்ய வேண்டும்.

     

    மிதுன லக்னம் 

    குணமும், அதிர்ஷ்ட நிறமும், அதிர்ஷ்ட ரத்தினக்கல்லும்.


     மிதுன லக்னத்தின் அதிபதி புதனாவார். மிதுன லக்னத்தின் நிறம் பச்சை நிறமாகும். மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு, வியாழனும் செவ்வாயும் மாரகத்தை செய்பவர்கள். வியாழன் பாதகாதிபதியுமாவார்.

     

    இவர்கள் கூச்ச சுபாவம் உடையவர்களாகவும், இனிய வார்த்தை பேசுபவர்களாகவும், வார்த்தை வலிமை மிக்கவர்களாகவும் இருப்பார்கள். ஆச்சார அனுஷ்டானங்களை பின்பற்றுபவர்களாகவும், கபட பேச்சு பேசுபவர்களாகவும் இருப்பார்கள். தன் காரியத்திலேயே கண்ணாய் இருப்பார்கள். மனைவி சொல்லை கேட்பவராக இருப்பார்கள்.

     

    இந்த லக்னத்தில் பிறந்தவர்கள், வெளிர், அடர் பச்சை நிறம் கொண்ட ஆடைகளை அணிவது ஆளுமையை அதிகபடுத்தும். அத்துடன் மிளிரும் வெள்ளை மற்றும் நீல கலரில் ஆடைகள் அணிவது நன்மை தரும். ஆபரண வகையில் இவர்கள் அதிர்ஷ்ட கல்லாக மரகதக் கல்லை ஆபரணங்களில் அணிந்து கொள்வது, ஆத்ம பலத்தை கூட்டும். மேலும் கூடுதலாக வைரம் மற்றும் நீலகல்லை பயன்படுத்துவது மேலும் சிறப்பு தரும்.

     

    அத்துடன் ராகுவோ அல்லது கேதுவோ ஜாதகத்தில் யோகராக வருவாரே ஆனால் அவர்களின் நிறமான கருப்பு அல்லது செங்கருப்பு நிறத்தில் ஆடையும், கோமேதகத்தையோ அல்லது வைடூரியத்தையோ ஜாதகத்தை பொறுத்து அணிகலனாக கூடுதலாக பயன்படுத்தி கொள்வது உயர்வு தரும்.

     

    குறிப்பு:- என்ன தான் சுக்கிரனும் சனியும் யோகராக வந்தாலும், சுக்கிரன் பனிரெண்டாமிடத்திற்கும், சனி எட்டாமிடத்திற்கும் ஆதிபத்தியம் வகிப்பதால் அவர்களின் நிலைகளை ஜாதகத்தில் பார்த்தே தீர்மாணிக்க வேண்டும்.

     

    கடக லக்னம்

    குணமும், அதிர்ஷ்ட நிறமும், அதிர்ஷ்ட ரத்தினக்கல்லும்.

      

     கடக லக்னத்தின் அதிபது சந்திரனாவார். கடக லக்னத்தின் நிறம் வெண்மை நிறமாகும்.இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகைவராவார். இவர் கடக லக்னத்திற்கு மாரகத்தையும் தருபவராவர். சுக்கிரனோ கடகத்திற்கு பெரும் பாதகத்தை செய்பவராவார். செவ்வாயும் வியாழனும் யோகத்தை தருபவர்களாவார்கள்.

     

    இந்த லக்னத்தில் பிறந்தவர்கள். சாமர்த்தியசாலிகளாகவும், கம்பீர தோற்றம் கொண்டவர்களாகவும், இருப்பார்கள். நவ தானிய வழியில் செல்வம் சேர்ப்பவர்களாகவும், குரு விசுவாசம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். தந்தை சொல் கேளாதவராகவும் இருப்பார்கள்.

     

    இந்த லக்னத்தில் பிறந்தவர்கள், பொதுவாக வெள்ளை நிறத்திலான ஆடைகளை அணிவது யோகம் தரும். அத்துடன் அடர், வெளிர் மஞ்சள் மற்றும் அடர் சிவப்பு நிறத்திலான ஆடைகளை அணியாலாம்.

     

    முத்துக்கள் பதித்த ஆபரணங்களை அணிந்து கொள்வது ஆத்ம பலத்தை கூட்டுகிறது. கூடுதலாக புஷ்பராகம் மற்றும் பவளகல் அணிவது கூடுதல் நன்மைகளை தரும்.

     

    குறிப்பு:- உங்களுக்கு யோகத்தை செய்யும் குரு பகவானே ஆறாமிடமான கடன் நோய் எதிரி தொட்ர்பான ஆறாமதிபதியாகவும் வருவதால், ஜாதகத்தில் குருவின் நிலை அறிந்தே அதிர்ஷ்ட கல்லை தேர்ந்தெடுக்க வேண்டும்.

     

    சிம்மம் லக்னம்

    குணமும், அதிர்ஷ்ட நிறமும், அதிர்ஷ்ட ரத்தினக்கல்லும்.

     

     சிம்ம லக்னத்தின் அதிபதி சூரியனாவார். சிம்ம லக்னத்தின் நிறம் வெளிர் சிவப்பு ஆகும். இந்த லக்னத்தில்  பிறந்தவர்களுக்கு சுக்கிரனும், குருவும் மாரகாதிபதிகளாவார்கள். செவ்வாய் பாதகாதிபதியாவார்.

     

    இந்த லக்னத்தில் பிறந்தவர்கள், கம்பீரமான தோற்றமும், பேச்சு வளமை உள்ளவர்கள் ஆவார்கள். நன்கு சாப்பிடுபவர்களாகவும், பசி உடையவர்களாகவும் இருப்பார்கள். அற சிந்தனையும், தெய்வீக வழிபாடும் உடையவர்களாக இருப்பார்கள். முன் கோபம் உடையவர்களாகவும், தாய் தந்தையரை அசட்டை செய்யும் போக்கு இவர்களிடம் காணப்படும். தைரியம் மிக்கவர்களாகவும், சகலகலா வல்லவர்களாகவும் மக்களை வசியம் செய்ய கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

     

    இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் வெளிர் சிவப்பு, ஆரஞ்சு நிறத்தில் ஆடைகள் அணிவது, சிறப்பு என்றாலும் மஞ்சள் மற்றும் அட்ர் சிவப்பு போன்ற நிறத்திலும் ஆடைகள் அணியலாம்.

     

    ஆபரண வகையில் மாணிக்க கல் பதித்த ஆபரணங்களை மட்டும், அணிவதே சிறப்பு. உங்களின் யோகாதிபதிகளே மாரக பாதக அதிபதிகளாகவும் வருவதால் கல்லை மிக கவனமாக ஜாதகத்தை பரிசீலித்தே முடிவெடுக்க வேண்டும். ஜாதகத்தின் நிலையை பொறுத்து புஷ்பராகம் மற்றும் பவளக்கல் பதித்த ஆபரணங்களை தேர்ந்தெடுத்து அணிந்து கொள்ளலாம்.

     

    குறிப்பு: புதனின் மரகதக்கல்லும் உங்களுக்கு யோகம் செய்யும்.

     

    கன்னி லக்னம்

    குணமும், அதிர்ஷ்ட நிறமும், அதிர்ஷ்ட ரத்தினக்கல்லும்.

     

     இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி புதனே ஆவார். இவரின் நிறம் பச்சை நிறமே ஆகும். இந்த லக்னத்திற்கு வியாழனும் சந்திரனும் மாரகாதிபதிகளாவார்கள். வியாழன் பாதகாதிபதியுமாவார். சனியும் சுக்கிரனும் யோகாதிபதிகளாவார்கள்.

     

    கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் இரக்கமுள்ளவர்களாகவும், தர்மவானாகவும் திகழ்வார்கள். நல்ல நடத்தையும் ஆச்சாரம் உடையவர்களாகவும் இருப்பார்கள். பிறர் உதவியால், தொழில், தன லாபம் பெற்றவர்களாகவும், வெகுஜன பிரியர்களாகவும் இருப்பார்கள். நன்மை தீமை இரண்டும் கலந்தே செய்யும் குணம் படைத்தவர்களாவார்கள்.

     

    இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் பச்சை நிறத்தில் ஆன ஆடைகள் அணிவது சிறப்பு தரும். அத்துடன் நீல கலரிலும், மிளிரும் வெண்மை கலரிலும், ஆடைகளை அணிவது கூடுதல் சிறப்பு தரும்.

     

    அணிகலனாக மரகத கல்லை பயன்படுத்துவது, ஆத்ம பலத்தை கூட்டும். கூடுதலாக நீலக்கல் மற்றும் வைரக்கல் பதித்த ஆபரணங்களையும் அணிவது, கூடுதல் நன்மை தரும்.

     

    அத்துடன் ராகுவோ கேதுவோ ஜாதகத்தில் யோகராக வருவார்களாயின் அவர்களின் அதிர்ஷ்ட கல்லான கோமேதகம் மற்றும் வைடூரியம் பதித்த அணிகலனையும் கருப்பு மற்றும் செங்கருப்பு நிற ஆடைகளையும் அணியலாம்.

     

    குறிப்பு:- சனி யோகாதிபதியாக இருப்பினும் அவரே அவயோக ஸ்தானமான ஆறாமிடத்திற்கும் ஆதிபத்தியம் வகிப்பதால் ஜாதகத்தில் சனியின் நிலையை பொறுத்தே கல்லை தேர்ந்தெடுக்க வேண்டும்.

     

    துலாம் லக்னம்

    குணமும், அதிர்ஷ்ட நிறமும், அதிர்ஷ்ட ரத்தினக்கல்லும்.

     

     

     துலாம் லக்னத்தின் லக்னாதிபதி சுக்கிரனாவார். சுக்கிரனுக்கு ஏற்ற நிறம் ரிஷப ராசியை போன்றே மின்னும் வெள்ளை நிறமாகும். இந்த லக்னத்திற்கு செவ்வாய் மாரகாதிபதியாவார். சூரியன் பாதகாதிபதியாவார். சனியும் புதனும் யோகாதிபதிகளாவார்கள்.

     

    துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் சிறந்த குடும்ப தலைவனாக விளங்குவார்கள். தன் பூர்வீக குல பெருமையை காக்கும் பாக்கியத்தை பெற்றவர்கள். அலங்கார பிரியர்களாக இருப்பார்கள். நல்ல குணம், பொறுமை, வல்லமை, இரக்க குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அற நெறி தவறாத மணம் படைத்தவர்கள்.

     

    இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் பளபளக்கும் வெண்ணிற பட்டாடைகள், மினு மினுக்கும் வெள்ளை ஆடைகளை அணியலாம். கூடுதலாக நீலக்கலர் மற்றும் பச்சை கலரில் பகட்டான ஆடைகளை அணியலாம். ஆபரண வகையில் வெள்ளி அல்லது பிளாட்டினத்தால் ஆன ஆபரணங்களில் வைரக்கல் பதித்து அணிந்து கொள்வது மிக மிக சிறப்பு. அத்துடன் கூடுதலாக நீலக்கல் மற்றும் மரகதக் கல்லையும் சேர்த்து அணிந்து கொள்வது நன்மை தரும்.

     

    ராகுவோ கேதுவோ இவர்களின் ஜாதகத்தில் யோகராக வருவாராயின் ராகுவாய் இருந்தால் கோமேதக கல்லையும், கேதுவாய் இருந்தால் வைடூரியத்தையும் ஆபரணத்தில் சேர்த்து அணிந்து கொள்வது கூடுதல் சிறப்பு தரும்.

     

    குறிப்பு :- புதன் யோகராக இருப்பினும் அவர் பனிரெண்டாமிடத்திற்கும் ஆதிபத்தியம் வகிப்பதால், புதனின் நிலையை ஜாதகத்தில் ஆராய்ந்தே மரகத கல்லை பயன் படுத்த வேண்டும்.

     

    விருச்சிகம் லக்னம்

    குணமும், அதிர்ஷ்ட நிறமும், அதிர்ஷ்ட ரத்தினக்கல்லும்.

     

     

     விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி செவ்வய் ஆவார். செவ்வாய்க்கு ஏற்ற நிறம் சிவப்பு ஆகும். இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சனியும் புதனும் மாரகாதிபதிகளாவார்கள். சந்திரன் பாதகாதிபதி ஆவார். குருவும் சந்திரனும் (பாதகாதிபதியாக இருப்பினும்) யோகாதிபதிகளாவார்கள்.

     

    இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் தாய் தந்தையரிடம் அதிக அன்பும் மரியாதையும் வைத்திருப்பர். மனைவி இடத்தில் ஆசையும் பாசமும் கொண்டவர்களாக இருப்பார்கள். இனிமையான வார்த்தைகள் பேசுவார்கள். புத்திமானாகவும், எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பதில் வல்லவர்களாகவும் இருப்பார்கள்.

     

    இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் சிவப்பு நிற ஆடையை அணிவது சிறப்பு. அத்துடன் மஞ்சள் மற்றும் வெள்ளை நிற ஆடைகளையும் அணிவது மேலும் கூடுதல் சிறப்பு தரும். ஆபரண வகையில் பவளக் கல் பதித்த தங்க ஆபரணங்களை அணிவது மேன்மை தரும். அத்துடன் புஷ்பராகம் மற்றும் முத்துக்கள் பதித்த தங்க ஆபரணங்களையும் சேர்த்து அணிவது கூடுதல் சிறப்பு தரும்.

     

    உங்களின் ஜாதகத்தில் ராகுவோ கேதுவோ யோகர்களாக வருவார்களாயின் ராகுவாய் இருந்தால் கோமேதகத்தையும் கேதுவாய் இருந்தால் வைடூரியத்தையும் ஆபணங்களில் சேர்த்து அணியலாம். அதேபோல ராகுவாய் இருந்தால் கருப்பு நிறத்தையும் கேதுவாய் இருந்தால் செங்கருப்பு நிறத்திலும் ஆடைகளை அணிவது நல்லது.

     

    குறிப்பு: சந்திரன் யோகராக இருப்பினும் அவரே பாதகாதிபதியாகவும் வருவதால் சந்திரனின் நிலையை ஜாதகத்தில் அறிந்தே கல்லை பயன் படுத்த வேண்டும்.

     

    தனுசு லக்னம்

    குணமும், அதிர்ஷ்ட நிறமும், அதிர்ஷ்ட ரத்தினக்கல்லும்.

     

     தனுசு லக்னத்தில் பிறந்தவர்களின் லக்னாதிபதி வியாழனாவார். வியழனுக்கு ஏற்ற நிறம் மஞ்சளாகும். இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு புதனும் சுக்கிரனும் மாரகத்தை செய்வார்கள். புதன் பாதகத்தையும் செய்பவராவார். செவ்வாயும் சூரியனும் யோகாதிபதிகளாவார்கள்.

     

    இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களின் அன்புக்கு கட்டுபட்டு நடப்பார்கள். சத்தியவானாகவும், கொடைமனம் கொண்ட கீர்த்திமானாகவும் விளங்குவர். நல்ல கல்விமானாகவும் பிற எதிரிகளை குறிப்பறிந்து அறிவதில் வல்லவர்களாகவும், இளம் வயதிலேயே செல்வம் ஈட்டுவதில் திறமை சாலிகள். கூச்ச உணர்வும் பய உணர்வும் கொண்டவர்கள்.

     

    இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் மஞ்சள் நிற ஆடைகளை அணிவது நன்மை தரும். அத்துடன் சிவப்பு, ஆரஞ்சு, இளம் சிவப்பு நிறத்திலும் ஆடை அணிவது கூடுதல் சிறப்பு தரும். ஆபரண வகையில் தங்க ஆபரணங்களில் புஷ்பராகம் பதித்த ஆபரணங்களை அணிவது ஆத்ம பலத்தை கூட்டுகிறது. அத்துடன் திரிகோணாதிபதிகளின் கல்லான பவளக்கல் மற்றும் மாணிக்க கல் பதித்த ஆபரணங்களையும் கூடுதலாக அணிவது மேலும் சிறப்பு தரும்.

     

    இவர்களின் ஜாதகத்தில் ராகு யோகராக வருவாரேயாயின் அவரின் அதிஷ்ட கல்லான கோமேதகத்தையும் கேது யோகராக வருவாராயின் வைடூரியம் போன்ற கல்லையும் ஆபரணத்தில் அணிந்து கொள்வது கூடுதல் நன்மை தரும்.

     

    குறிப்பு: செவ்வாய் யோகராக இருப்பினும் அவர் பனிரெண்டுக்கும் உரியவராக வருவதால் செவ்வாயின் நிலையை ஜாதகத்தில் அறிந்தே அதிர்ஷ்ட கல்லை தெரிவு செய்ய வேண்டும். 

     

    மகரம் லக்னம்

    குணமும், அதிர்ஷ்ட நிறமும், அதிர்ஷ்ட ரத்தினக்கல்லும்.

     

     மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சனியாவார். சனியின் நிறம் கரு நீலமாகும். இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதியாகிய சனியும் மற்றும் சந்திரனும் மாரகாதிபதிகளாவார்கள். செவ்வாய் பாதகாதிபதியாவார். சுக்கிரனும் புதனும் யோகாதிபதிகளாவார்கள்.

     

    இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் நீண்ட, உருண்ட, திரண்ட விழிகளை பெற்றிருப்பார்கள். மானுட நேயமிக்கவர்களாகவும் இருப்பார்கள்.மனைவியால் அதிகம் நேசிக்கபடுவார்கள்.

     

    இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் நீலக்கல் மற்றும் அடர் நீல கலரில் ஆடை அணிவது மேன்மை தரும். அத்துடன் அவர்கள் பச்சை கலரிலும், மின்னும் வெண்மை நிறத்திலும் ஆடை அணிவது நன்மையை தரும். ஆபரணங்கள் வகையில் நீலக்கல் பதித்த வெள்ளி, பிளாட்டினம் போன்ற அணிகளன்கள் இவர்களுக்கு ஆத்ம பலத்தினை வலுவூட்டும். அத்துடன் வைரக்கல் மரகதக் கல் போன்ற அதிர்ஷ்ட கல்லையும் பயன்படுத்துவது கூடுதல் சிறப்பு தரும்.

     

    இவர்களின் ஜாதகத்தில் ராகுவோ கேதுவோ யோகராக வரும் பட்சத்தில் அவர்களின் அதிர்ஷ்ட கல்லான கோமேதகம் அல்லது வைடூரியம் பதித்த ஆபரணங்களை அணியலாம்.

     

    குறிப்பு:- இவர்களுக்கு லக்னாதிபதியே மாரகாதிபதியாகவும், யோகரான புதனே ஆறுக்குரியவராகவும் வருவதால் இவர்கள் இருவரின் நிலையை ஜாதகத்தில் ஆராய்ந்தே அதிர்ஷ்ட கல் குறித்த முடிவுக்கு வர முடியும்.

     

    கும்பம் லக்னம்

    குணமும், அதிர்ஷ்ட நிறமும், அதிர்ஷ்ட ரத்தினக்கல்லும்.

     

     கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் லக்னாதிபதி சனியே ஆவார். சனியின் அதிர்ஷ்ட நிறம் அடர் நீலமாகும். இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாயும் புதனும் மாரகாதிபதிகளாவார்கள். புதன் பாதகாதிபதியுமாவார். சுக்கிரனும் (பாதகாதிபதியாகவும் இருந்தாலும்) புதனும் (மாரகாதிபதியாக இருந்தாலும்) யோகாதிபதிகளாவார்கள்.

     

    இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் அதிகம் கற்று கொள்ள ஆர்வம் அற்றவர்கள், பித்த உடம்பு காரர்கள். சுய தம்பட்டம் அடித்து தன்னை எவரிடமும் பெருமையாக பேசி கொள்வர். சிறிய உதவியை செய்தால் கூட அதை பெரிய உதவியாக பெருமை அடித்து கொள்வர். பென்களால் நேசிக்கப்படுவார்கள்.

     

    இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் நீல கலரில் ஆடைகள் அணிவது சிறப்பு. கூடுதலாக பச்சை கலரிலும் மின்னும் வெள்ளை கலரிலும் ஆடைகள் அணிவது கூடுதல் சிறப்பு.

     

    ஆபரணங்கள் வகையில் நீலக் கல் பதித்த வெள்ளி பிளாட்டினம் போன்ற ஆபரணங்களை அணிவது ஆத்ம பலத்தை கூட்டும். கூடுதலாக மரகதக்கல் மற்றும் வைரக்கல் பதித்த ஆபரணங்கள் அணிவது கூடுதல் யோகம் தரும்.

     

    ராகுவோ கேதுவோ இவர்களின் ஜாதகத்தில் யோகராக வருவாராகில் அவர்களின் அதிஷ்ட கல்லான கோமேதகம், வைடூரியம் போன்ற அதிர்ஷ்ட கல்லையும் அணியலாம்.

     

    குறிப்பு: லக்னாதிபதி சனியே பனிரெண்டுக்கும், யோகாதிபதி புதனே அஷ்டம, மாரக அதிபதியாகவும், மற்றுமொரு யோகரான சுக்கிரன் பாதகாதிபதியாகவும் வருவதால் இவர்களின் நிலையை முதலில் ஜாதகத்தில் நன்கு ஆராய்ந்தே இவர்களின் அதிர்ஷ்ட கல்லை தெரிவு செய்ய வேண்டும்.

     

    மீனம் லக்னம்

    குணமும், அதிர்ஷ்ட நிறமும், அதிர்ஷ்ட ரத்தினக்கல்லும்.

     

     மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி வியாழனாவார். அவரின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் நிறமாகும். இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு புதனும் சனியும் மாரகாதிபதிகளாவார்கள். மேலும் புதனே பாதகாதிபதியுமாவார். செவ்வயும் சந்திரனும் யோகாதிபதிகளாவார்கள்.

     

    இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் அழகான உடல் அமைப்பை கொண்டவர்களாக இருப்பார்கள். செயற்கை அலங்காரமற்றவர்கள். வாசனை பூக்களின் மீது நாட்டமும், குளிர்ச்சியான கண்களும் உடையவர்கள். சமய சடங்குகளை தவறாது கடை பிடிப்பவர்கள். சற்று கோபக்காரர்கள். அதிக செலவாளி. இரக்கமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். ஆனாலும் முன் ஜாக்கிரதை உள்ளவர்கள்.

     

    இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் மஞ்சள் நிற ஆடை அணிவது சிறப்பு. அத்துடன் வெள்ளை நிற ஆடைகளையும் சிவப்பு நிற ஆடைகளையும் அணிவது மேலும் சிறப்பு.

     

    ஆபரண வகையில் தங்கத்தால் ஆன ஆபரணத்தில் புஷ்பராகம் கல்லை பதித்து பயன் படுத்துவது, ஆத்ம பலத்தை கூட்டும். அத்துடன் இவர்களின் திரிகோணாதிபதிகளாகிய சந்திரன் செவ்வாயின் அதிர்ஷ்ட கல்லான முத்து மற்றும் பவளக் கல் பதித்த தங்க ஆபரணங்களை பயன்படுத்துவது மேலும் பலத்தை கூட்டுகிறது.

     

    இவர்கள் ஜாதகத்தில் ராகு யோகராக வருவாராயின் அவரின் அதிஷ்ட கல்லான கோமேதகத்தையும் கேது யோகராக வருவாராயின் அவரின் அதிர்ஷ்ட கல்லான வைடூரியம் போன்ற அதிர்ஷ்ட கல்லையும் பயன் படுத்துவது கூடுதல் நன்மை தரும்.


    Post a Comment

    0 Comments