போன பதிவில் அரசு
வேலையை ஒருவருக்கு பெற்று தரும் முதன்மை கிரகம் சூரியன் என பார்த்தோம் ! தற்போது அதன்
தொடர்ச்சியாக அரசு வேலையில் ஒருவர் எந்த துறையில் இருப்பார் என்பதை பார்ப்போம் ! முந்தைய கட்டுரையை படிக்க CLICK HERE
அதை அறிந்து கொள்ள
எந்த கிரகம் லக்னம் மற்றும் ராசிக்கு இரண்டு மற்றும் த்தாம் இடத்தோடு வலுத்து தொடர்பு கொள்கிறது என்பதை
கவனிக்க வேண்டும் ! அப்படி தொடர்பு கொள்ளும் கிரகம் பாவ கிரகமாக இருப்பின் அந்த கிரகத்திற்கு
மற்ற ஏதாவது ஒரு சுப கிரகத்தின் தொடர்பு நிச்சயம் இருந்தாக வேண்டும் !
அப்படி தொடர்பு
கொள்ளும் கிரகம் செவ்வாயாக இருந்தால், காவல் துறை, விளையாட்டு துறை, உணவு துறை, அதிகாரம்
செய்யக்கூடிய சீருடை பணி மற்றும் அரசு மருத்துவராக பணிபுரியும் நிலை உருவாகும் !
அதுவே சனியாக இருந்தால்,
அரசின் இரும்புருக்கும் ஆலைகள், மெக்கானிக்கல் தொடர்பான துறைகள், சுரங்கத்தில் பணி
புரியும் நிலை, இன்சுரன்ஸ் துறைகள் அமையும் ! அந்த சனிக்கு சுப கிரகங்களின் தொடர்புகள்
இருக்கும் நிலையில், அந்த சுபகிரகம் கெட்டிருந்தால் துப்புரவுப்பணி போன்றவை கிடைக்கும் !
சரி பத்தாமிடத்தோடு
தொடர்பு கொள்ளும் கிரகம் பாவ கிரகமாக இல்லாமல் சுப கிரகமாக இருப்பின் ! உதாரணமாக குரு
பகவான் பத்தாமிடத்தோடு தொடர்பு கொண்டால், அவர் ஆசிரியராகவோ, அறநிலைய துறையிலோ, வங்கி
போன்ற நிதி துறையிலோ, வரி வசூல் செய்யும் துறைகளிலோ பணி புரிவார் !
பத்தாமிடத்தோடு
சுக்கிரன் தொடர்பு கொள்ளும் நிலையில் அரசின் துணி சார்ந்த நிறுவனங்கள், பெண்கள் தொடர்புடைய
துறைகளில் பணி கிடைக்கும் !
அதுவே சந்திரனாக
இருந்தாலும் பெண்கள் தொடர்புடைய துறைகளும், பால் போன்ற திரவ பொருட்கள் தொடர்புடைய துறைகளிலும்
ஒருவருக்கு பணியானது கிடைக்கும் !
பத்தாமிடத்தோடு
புதன் தொடர்புகொள்ளும் நிலையில், எழுத்து தொடர்புடைய துறைகள், பதிவுத்துறை, கணக்கு
தொடர்பான ஆடிட்டர் அக்கவுண்டன்ட் பணிகள் கிடைக்கும் !
இதுவே ராகு கேதுவாக
இருப்பின் ராகு கேதுவுடன் சேர்ந்த, ராகு கேதுவை பார்த்த மற்றும் ராகு கேது இருக்கும்
வீட்டின் அதிபதியை பொறுத்து துறைகள் மாறுபடும் . அவற்றை பற்றி எதிர் வரும் காலத்தில்
விரிவாக பார்ப்போம் !
இருப்பினும் பொதுவாக,
ராகுவாக இருப்பின் உளவுத்துறை, புலனாய்வுத்துறை, சைபர் கிரைம் துறைகளும், அரசின் ரசாயனத்துறை,
மதுபானம் தொடர்பான துறைகளும், சில நிலைகளில் வெளியுறவு துறைகளும் கூட கிடைக்கும் !
கேதுவுக்கும்,
ஆன்மீகத்துறைகளையும், வெளியுறவுத் துறைகளையும் சொல்லலாம் !
முக்கியமாக இந்த
துறைகள் அரசு வேலையாக அமைய ஒருவருக்கு சூரியனின் வலுவும், சூரியன் பெற்றுள்ள சுப கிரக
தொடர்புமே காரணமாகும் !
இவை தொடர்பு பெறா
நிலையிலோ ஆல்லது ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்களின் தொடர்பிலோ பத்தாமிடம் இருப்பின், நடப்பு
தசா புத்தியை பொறுத்து, அரசு உயர் பதவியிலோ அல்லது கடை நிலை பணியிலோ ஒருவர் துறைகள்
மாறிக்கொண்டே இருப்பார் ! மேலும் கிரகங்களின் இணைவுகளை பொறுத்தும் சில மாற்றங்கள் இருக்கும்
அவற்றையும் எதிவரும் காலங்களில் பார்ப்போம் !
இனி அடுத்த கட்டுறையில்
அரசு உயர் பதவில் இருக்க எது போன்ற கிரக நிலைகள் வேண்டும், அரசின் கீழ்நிலையில் பணி
புரிபவர்களின் ஜாதகத்தில் கிரக நிலைகள் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்
! தொடரும்…..
0 Comments