தற்போதைய நிலையில் அரசு வேலைக்கு அனைவரும் ஆசைப்படுவதும், சரிதானே! மாதம் பிறந்தால் சம்பளம் கைக்கு வந்துவிடும், வேலை நிரந்தரம், சமூக அந்தஸ்து, என இவற்றை அரசு வேலை பெற்று தரும் போது, மனித மனம் அதன் மேல் ஆசை கொள்ளத்தானே செய்யும் !
அதிலும் தற்போது ஆண்களுக்கு திருமணத்திற்கு பெண் கிடைப்பது மிகவும் சிரமமாக இருக்கும் சூழலில், மாப்பிள்ளை அரசு ஊழியராக இருந்தால் விரைந்து திருமணமும் கூட நடந்து விடுகிறது. அப்படிப்பட்ட அரசு வேலைக்கு செல்ல யாருக்குத்தான் பிடிக்காது.
சரி விஷயத்திற்கு வருவோம், அனைவரும் அரசு வேலைக்கு ஆசை பட்டாலும் பலருக்கும் அது எட்டா கனியாக அமைந்து விடுகிறது. அப்போது யாருக்குத்தான் அரசு வேலை அமையும் என்பதை, ஜாதகத்தை பார்த்து எப்படி அறிந்து கொள்வது என பார்ப்ப்போம்.
அரசை குறிக்கும் கிரகம் சூரியனாவார்! சூரிய பகவானே நவ கிரகங்களின் அரசர். அவரே ஜாதகத்தில் ஒருவர் அரசு பதவியில் அமர்வாரா ? இல்லையா ? என்பதை ஜாதகத்தில் சுட்டி காட்டுவதில் முதன்மையானவர்.
எவர் ஜாதகத்தில் சூரிய பகவானுக்கு சுப கிரங்களான குரு, சுக்கிரன் மற்றும் வளர் பிறை சந்திரன் போன்ற சுப கிரகங்களின் பார்வையோ, இணைவோ கிடைக்கிறதோ அவர் நிச்சயம் அரசு வருமானத்தில் சாப்பிட பிறந்தவர் என புரிந்து கொள்ளலாம்.
சூரியன் எந்த அளவுக்கு வலுத்து சுப கிரகங்களின் தொடர்பை பெற்றுள்ளாரோ அந்தளவிற்கு அரசு உயர்பதவியில் ஒருவர் இருப்பார். சூரியனுடன் தொடர்பு கொள்ளும் சுபகிரகங்களும் வலுத்திருந்தால் அது இன்னும் சிறப்பு.
சூரியன் ஆட்சி, உச்சம், திக்பலம், வர்கோத்தமம் அடைவது போன்ற நிலைகளில் ஒருவருக்கு நிச்சயம் அரசு, அரசுசார்ந்த நற்பலன்கள் உண்டு.
மேலும் அரசு வேலையில் எந்த தொழில் அமையும்? எந்த படிநிலையில் பதவி கிடைக்கும்? எப்போது அரசு வேலை கிடைக்கும்? அரசு கடைநிலை ஊழியர் யார்? அரசு அதிகாரி யார்? போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கும் விதமாக இன்னும் பல கட்டுரைகள் நம்முடைய தளத்தில் வெளியாகும்.
நண்பர்கள் தொடர்ந்து இந்த தளத்தையும், தமது யூடியூப் சேனலையும் பின் தொடர்ந்து வாருங்கள். உங்கள் சந்தேகங்களை கமண்டில் இங்கே பதிவிடுங்கள். தனி நபர் ஜாதகத்திற்கு பலன் கேட்பவர்கள், பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடத்தையும் பதிவிட்டு கேள்வியை கேளுங்கள்.
அடுத்த கட்டுரை CLICK HERE
நன்றி.
இந்த கட்டுரை பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
0 Comments